சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தொடர்பான உண்டியல் திறப்பு 26.03.2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இணை ஆணையர்/செயல் அலுவலர் திரு.எம்.சூரியநாராயணன், தஞ்சாவூர் துணை ஆணையர்/நகை சரிபார்ப்பு அலுவலர் (கூடுதல் பொறுப்பு) திருமதி.கோ.கவிதா, உதவி ஆணையர்/நிர்வாக நேர்முக உதவியாளர் திருமதி.வி.சுமதி மற்றும் திருச்சி உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) திரு.க.அருட்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இத்திருக்கோயில்

கண்காணிப்பாளர்கள்/செயல் அலுவலர்கள், மண்ணச்சநல்லூர் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் திரு.நா.சீனிவாசன், திருக்கோயில் பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் மற்றும் கொனலை இந்திரா செவிலியர் கல்லூரி மாணவியர்கள் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
நிரந்தர உண்டியல்களில் கிடைக்கப்பெற்ற காணிக்கை விவரங்களின்படி, முதன்மை திருக்கோயில் ரொக்கம் 1,15,15,219 ரூபாயும், அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில் மூலம் 9,62,004 ரூபாயும், அருள்மிகு உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோயில் மூலம் 18,090 ரூபாயும்

மற்றும் அருள்மிகு போஜீஸ்வரர் திருக்கோயில் மூலம் 3,364 ரூபாயும் வசூலாகியுள்ளது. தங்கம் 01.408 கி.கி, வெள்ளி 01.813 கி.கி, அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 208 எண்கள் மற்றும் அயல்நாட்டு நாணயங்கள் 818 எண்கள் கண்டறியப்பட்டன. இதற்கு முன்னதாக இறுதியாக 12.03.2026 அன்று உண்டியல் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments