திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இன்று (28.01.2026) உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்த நிகழ்வில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. V.S.P. இளங்கோவன், இணை ஆணையர்/செயல் அலுவலர் திரு. எம். சூரியநாராயணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதற்கு முன் இறுதியாக 12.01.2026 அன்று உண்டியல் திறக்கப்பட்ட நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்று நடைபெற்ற இந்த பணியில் வங்கிப் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்த உண்டியல் எண்ணும் பணியின் முடிவில், இன்று ஒரு நாள் மட்டும் முதன்மைத் திருக்கோயிலில் மட்டும் அதிகபட்சமாக ரூ. 1,14,54,854 கிடைத்துள்ளது. இது தவிர, ஆதி மாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 6,02,502, உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோயிலில் ரூ. 16,252 மற்றும் போஜீஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 5,166 என ரொக்கக் காணிக்கை பெறப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாகச் செலுத்திய தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மொத்தம் 1 கிலோ 631 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ 074 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய அளவிலான காணிக்கை வரவு, அம்மன் மீதான பக்தர்களின் தீராத நம்பிக்கையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments