அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் திமுக நிர்வாகியை சட்டையை கழட்டி அரை நிர்வாணமாக கையை கட்டி இழுத்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமினை தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் 5வது நாளாக இன்று காலை கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்… திமுக அரசிடம் மக்கள் மாதம் 1000 ரூபாய் எதிர்பார்க்கின்றனர் . தேர்தல் வாக்குறுதியில் கூறியதை திமுக அரசு ஏன் நிறைவேற்றவில்லை.
 பெட்ரோல், டீசல் விலையை பொருத்த வரை நிதி தன்னாட்சி பாதிக்கப்படும் என்பதால் நாங்கள் அதை ஜி எஸ் டிக்குள் கொண்டு வரவில்லை. டி.ஆர் பாலு கூறுகிறார் பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று, கேட்டால் கட்சி ரீதியாக சொன்னோம் என்கிறார். கட்சி ரீதியாக ஜிஎஸ்டிகுள்  கொண்டு வர வேண்டும் என்கிறார்கள் – ஆட்சி ரீதியாக ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரக் கூடாது என்கிறார்கள். முரண்பாடுகளின் மொத்த உருவமாக திமுக உள்ளது.

 கட்சி வேறு, ஆட்சி வேறு என்கிற அளவில் செயல்பட்டு வருகிறார்கள். ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது என்று கூறியது குறித்த கேள்விக்கு?… ஆறுமுகசாமி ஆணையம் ஏறத்தாழ முழுமையாக விசாரணையை நடத்தி முடித்து வருகிறது. இது குறித்து நான் கருத்து கூறினால் என்னையும் ஆணையம் அழைத்து சம்மன் செய்து விசாரணை செய்வார்கள். இந்த நேரத்தில் நான் இது குறித்து எதுவும் கூற முன் வரவில்லை. திமுக ஆட்சியில் பத்திரிகையாளர்களை விட்டால் அந்தமானுக்கு தள்ளி பேட்டி எடுக்க சொல்வார்கள் போல.

 சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து உங்களுடைய கருத்து ? ஏற்கனவே கட்சி எடுத்த ஒரே முடிவு தான். நேற்று, இன்று, நாளை கட்சி எடுத்த முடிவு தான். அதில் எந்த மாற்றமும் இல்லை என பதிலளித்தார். முன்னதாக ஜெயக்குமார் கையெழுத்திட கண்டோன்மென்ட் காவல் நிலையத்துக்குள் வந்தபோது அவருடன் வழக்கறிஞர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் காவல் நிலைய வாயிலில் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

 31 Oct, 2025
31 Oct, 2025                           129
129                           
 
 23 March, 2022
 23 March, 2022

Comments