நேற்று (08.08.2024) பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து திருச்சிராப்பள்ளி மாநகரில் மேல புலிவார் ரோட்டில் உள்ள பிரபல உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுஆய்வு செய்யப்பட்டது.

உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் மிகவும் அசுத்தமாகவும் கழிவுநீர் தொட்டியில் இருந்து நோய் தொற்று ஏற்படும் வண்ணம் இருந்தது கண்டறியப்பட்டு அந்த உணவகத்தின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு பணிகளுக்காக மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவு பாதுகாப்பு துறையால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்த பின்னர் மறு ஆய்வு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரமற்று நடத்தப்பட்டு வந்த இந்த உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை பிரிவு 56-இன் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது இந்த ஆய்வின் போது தபாண்டி, செல்வராஜ், கந்தவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், மாவட்ட நியமன அலுவலர் அவர்கள் கூறுகையில்…… சுகாதாரமற்ற முறையில் உணவகம் இருந்தாலோ பாதுகாப்பற்ற உணவு விற்பனை செய்தாலோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் இதுபோன்ற தங்கள் பகுதிகளுக்கு அருகில் ஏதேனும், உணவகம் இருந்தால் புகார் அளிக்க வேண்டும் என்றும் தகவல் அளிப்பவரின் விபரங்கள் இரகசியம் காக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகார் எண்களில் புகார் தெரிவிக்கலாம்

மாவட்ட புகார் எண் : 96 26 83 95 95 / 99 44 95 95 95
மாநிலபுகார் எண் : 9444042322

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 09 August, 2024
 09 August, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments