Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் MSME-களுக்கான டிஜிட்டல் மற்றும் AI பயன்பாடு குறித்த கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி தொழிற்துறை மைக்ரோ தொழில்முனைவோர் சங்கம் (TIMEA) சார்பில், MSME நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றமும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகளும் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் 20 பிப்ரவரி 2026 அன்று நடைபெறுகிறது.

“Accelerating Digitalizations & AI Adoptions in MSME’s” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, MSME நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் போட்டித்திறனை மேம்படுத்த டிஜிட்டல் கருவிகள் மற்றும் AI பயன்பாடுகள் எவ்வாறு உதவுகின்றன என்பதைக் குறித்து விளக்கவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக IIT Madras பேராசிரியர் டாக்டர் ஆர். ரகுநாதன் ரெங்கசாமி (ஆன்லைன்) பங்கேற்கிறார். மேலும் DIC திருச்சி பொது மேலாளர் டி. சிவகுமார், TIMEA நிறுவனர் தலைவர் என். கனகசபாபதி, வேதா மில்க் நிறுவன மேலாண்மை இயக்குனர் என். ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.

நிகழ்ச்சி 20.02.2026 காலை 9:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை திருச்சி கண்டோன்மென்ட் ஹோட்டல் தமிழ்நாடு (காவிரி ஹால்) வளாகத்தில் நடைபெறும்.

100 உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி, பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. QR குறியீட்டை ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *