திருச்சி மாவட்டம் லால்குடி, நகர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும், ஜெயராணி என்பவருக்கும் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆன நிலையில் குழந்தைபேறு இல்லாததால், செயற்கை மகப்பேறு சிகிச்சைக்காக புத்தூரில் உள்ள ஜெனட் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றநிலையில் தாயான ஜான்சிராணி, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மகப்பேறு சிகிச்சைக்காக ஜெனட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண்குழந்தை பெற்றெடுத்தார்.
தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டநிலையில், ஜெயராணி உயிரிழந்த நிலையில், மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது போன்ற தொடர் மரணங்கள் இந்த மருத்துவமனை நிகழ்ந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது
இது தொடர்பாக மாவட்ட ஆட்சிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது இனிமேல் இது போன்ற மரணங்கள் இந்த மருத்துவமனையில் நிகழாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments