திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி துரை என்ற துரைசாமி கடந்த மாதம் புதுக்கோட்டையில் என்கவுண்டர் செய்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் துரையின் மச்சான் உறவினர் முருகேசன், மனைவி சசிகலா (துரையின் அக்கா) சோமரசம்பேட்டை பகுதியில் வசித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சசிகலா மற்றும் துரையின் ரகசிய சிநேகதி அனுராதா இருவரும் சேர்ந்துதான் துரையை காட்டிக் கொடுத்து விட்டனர் என முருகேசன் குறிப்பிட்டு வந்துள்ளார். இதையறிந்த சசிகலாவும், அனுராதாவும் சேர்ந்து முருகேசனை அடித்து துன்புறுத்தியதாகவும், அவரிடமிருந்து 10 லட்ச ரூபாய் பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதன்ல் பாதிக்கப்பட்ட முருகேசன் சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் முருகேசன் மனைவி சசிகலாவையும் துரையின் ரகசிய சிநேகிதி அனுராதவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு ஆளாகி புகார் அளித்த முருகேசன் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           122
122                           
 
 
 
 
 
 
 
 

 07 August, 2024
 07 August, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments