Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

காதல் விவகாரத்தில் சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அயன் புதுப்பட்டியைச் சேர்ந்த பிச்சை. இவருக்கு மூன்று மகள்கள். இதில் வித்தியா ( 21 ), காயத்ரி ( 20 ) இருவரும் காங்கேயத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று அயன் புதுப்பட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் காலை வீட்டை விட்டு சென்ற இருவரும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அதே பகுதியில் உள்ள பெரிய வேட்டை என்பவரின் கிணற்றில் காயத்ரி தண்ணீரில் இறந்த நிலையில் மிதந்து உள்ளார். தகவல் இருந்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் கிணற்றில் காயத்ரி மற்றும் வித்தியா உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண்களின் குடும்பத்தினரகடம் வளநாடு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்த இருவரும் வேறொருவருடன் காதல் வயப்பட்டு இருந்ததாக தெரிய வருகிறது. இதை அவரது தந்தை பிச்சை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும், தற்கொலைக்கு வேறு ஏது காரணம் உள்ளதா? என பல கோணங்களில் வளநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *