Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி சேவை உற்சவம்-வெயிலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் நாளை 01.04.2026 புதன்கிழமை ஸ்ரீதாயார் சன்னிதியில் ஸ்ரீநம்பருமாள்- ஸ்ரீரெங்கநாயகித் தாயார் சேர்த்தி சேவை உற்சவம் நடைபெற உள்ளது
அதை முன்னிட்டு கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் ஆலோசனைப்படி தற்போது

வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்காக கம்பர் மண்டபம் பகுதியில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டு
தாயார் சன்னதி ஆர்யப்ப்படாள் வாசல் பகுதியில் பக்தர்கள் வரிசையில் செல்லும் வழியில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் சேர்த்தி மண்டபம் பகுதியில் சுமார் 64 டன் கொள்ளளவு திறன் கொண்ட குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது மேலும் பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பாகவும் மற்றும் உபயதாரர்கள் உதவியுடனும் பானகம், மூலிகை நீர்மோர்,

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் பொங்கல் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் திருக்கோயில் பணியாளர்கள் பல்வேறு வசதிகளை செய்து வருகின்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *