நம்பெருமாள் இன்று (பகல் பத்து) 10 ஆம் நாளில்
நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரம்)
சௌரிக் சாயக் கொண்டை சாற்றி;
அதில் கலிங்கத்துராய், சூர்ய – சந்திர வில்லை ; சிகப்பு கல் நெற்றி பட்டை ; முத்து பட்டையை பக்க வாட்டில் கொண்டையில் அணிந்து
காதில் வைர மாட்டல் – தோடு – ஜிமிக்கி ;
வலது திருமூக்கில் மூக்குத்தி அணிந்து;

திருமேனியில் பங்குனி உத்திர பதக்கம்; தாயார் வைரத்திருமாங்ஙல்யம் ;
தொங்கல் பதக்கம்; வரிசையாக அடுக்கு பதக்கங்கள்; பெரிய பவழ மாலை; காசு மாலை; 2 வடமுத்து மாலை;
வலது திருக்கையில் – தங்க கோலக்கிளி ;இடது திருக்கையில் – வரிசையாக வில்வ பத்ரம், தாயத்து சரங்கள், வளையல், பவழ கடிப்பு , வில்வ பத்ர தொங்கல் சாற்றி;
திருவடியில் – சதங்கை , தண்டை அணிந்து ;
பின் சேவையாக – பின்னல் ஜடை – அதன்மேல் ஜடை தாண்டா; திருமுடியில் கல் இழைத்த ராக்கொடி; ஜடைக்கு மேல் – நாகம் வைத்த கல் இழைத்த ஜடை தாண்டா; புஜ கீர்த்தி; கச்சு எடுத்து கட்டி – அதில் அரைச் சலங்கை தொங்க விட்டுக் கொண்டு; ரங்கூன் அட்டிகை; ஒட்டியாணம் அணிந்து;

வெண் பட்டு அணிந்து – வலது திருவடியை மடித்து அமர்ந்தும்- இடது திருவடியை , திருக்கை தாங்க அமர்ந்தும்
அதி அற்புதமாக நாச்சியாரக சேவை சாத்திக்கிறார்
ரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டித் தொங்கல் அணிந்து;

சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி;
கண்டாபரணம்; திருமார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து; இருபுறமும் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம் – அழகிய மணவாளன் பதக்கம் சாற்றி; சிகப்புக் கல் மகர கண்டிகைகள் அணிந்து – அதன் மேல் சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள் சாற்றி; காசு மாலை, 2 வட முத்து மாலை அணிந்து;

மாந்துளிர் வர்ண பட்டு அணிந்து;
பின் சேவையாக – கண்ட பேரண்ட பக்க்ஷி ; புஜ கீர்த்தி; மற்றும் தாயத்து சரங்கள் அணிந்து சேவை சாத்திக்கிறார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments