Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது-அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ஆர். மனோகரன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட வயலூர் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக

கூட்டணி நிர்வாகிகள் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் வளர்மதி, சிறுபான்மையினர் நல பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட் ஜான், புரட்சித்தலைவர் அம்மா பேரவை மாநில துணை செயலாளர் க.ஜெயம் ஸ்ரீதர், புறநகர்

வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் A.கனகராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் . கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மற்றும் வேட்பாளர் மனோகரன் கழக நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *