ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 19ஆம் தேதி துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது
சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு மூலஸ்தானம் சந்தன மண்டபம் செல்வதற்கு பாஸ் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அதில் ஒருவர் 11 ஆயிரத்திற்கு பாஸ் தர பேரம் பேசிய வீடியோ வெளியாகி தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
எப்படி அவரிடம் கோவில் பாஸ் வந்தது அவர் எப்படி இவ்வளவு அதிகமான விலைக்கு விற்பனை செய்தால் என்பது தொடர்பாக ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments