SRM நிகர்நிலை பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி வளாகத்தில்
மருத்துவம் மற்றும் மருத்துவத்துறைச் சார்ந்த படிப்புகளின் கீழ்இயங்கி வரும் SRM பிசியோதெரபி கல்லூரியின் முதலாம் ஆண்டு
மாணவர்களின் தொடக்க விழா-2025. இளநிலை மற்றும்
முதுநிலை பிசியோதெரபி மாணவர்களின் முதலாம் ஆண்டு தொடக்க
விழா.

SRM இராமாபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி வளாகத்தினுடைய தலைவர் டாக்டர் .ரா. சிவக்குமார் அவர்கள் மாணவர்களுக்கு
ஊக்கமளித்து தன்னுயை சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்தார். SRM இணைத்தலைவர்- இராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம்
திரு.சி. நிரஞ்சன் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம் சிறக்க
உன்னத முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

விழாவில் இணை துணைவேந்தர் டாக்டர். முகமது சமுருதீன் கான்
அவர்கள் விழாவை தலைமை தாங்கி, பிசியோதெரபி துறையின்
சிறப்புகளையும் மற்றும் படிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
விழாவின் சிறப்பு விருத்தினர் டாக்டர். ஜி.எஸ். பாலச்சந்திரன்
அவர்கள் பிசியோதெரபி துறையின் மகத்துவத்தையும் மற்றும் துறையின் உள்ள வேலைவாய்ப்புகள், எதிரிகாலத்திற்கு எப்படி தயார்ப்
படுத்திகொள்வது என்று மாணவர்களுக்கு வழிகாட்டி சிறப்புரை
ஆற்றினார்.

புலத்தலைவர், கல்வி மற்றும் கல்வி
முனைப்பு துறையின் தலைவர் டாக்டர் ஜி. வைரவேல் அவர்கள்
கல்வியின் முக்கியத்துவத்தையும்,கல்வி கற்பதின் சிறப்பையும்
எடுத்துரைத்தார். மேலும் SRM பல்கலைக்கழகம் உலகத்தர
வரிசையில் உன்னத இடத்தை இந்த ஆண்டு அடைந்துள்ளது என்று
உரைத்தார். புலத்தலைவர், டாக்டர். ஆர்.கே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பிசியோதெரபி கல்லூரி
மற்ற கல்லூரிகளை விட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துகொண்டுள்ளது என்று வாழ்த்தினர்.

டாக்டர்.வி.பெ.ரா.சிவக்குமார், கல்லூரி முதல்வர்
மாணவர்களை வரவேற்றத்துடன் கல்லூரியில் படிக்கும் காலத்தில்
மாணவர்கள் தங்களை எப்படி தயார் படுத்தி கொள்ள வேண்டும்.
என்று எடுத்துக் கூறினார்.
இந்த முதலாம் ஆண்டு 2025 பிசியோதெரபி இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி மாணவர்களின் தொடக்க விழாவில், SRM திருச்சிராப்பள்ளி வளாகத்தின்
கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்கள், துணை முதல்வர்கள், நிர்வாகம் சார்ந்த அலுவலர்கள், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோருடன் சேர்ந்து 2025 ஆம் ஆண்டு மாணவர்கள்
உற்சாகமாக தங்களின் முதல் நாள் தொடக்க
விழா மிகவும் சிறப்பாக கல்லூரி விழா அரங்கத்தில் நடைபெற்றது.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision






Comments