Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சொன்னதைச் செய்தவர் ஸ்டாலின்; அதிமுக-பாஜக கூட்டணி ஒரு வாஷிங் மெஷின்!” – கனிமொழி அதிரடி பேச்சு.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சோமரசம் பேட்டை பகுதியில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி கருணாநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்கிற உரிமையோடு நாங்கள் வாக்கு கேட்கிறோம்.

சொன்னதை செய்து தந்திருப்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

மகளிர் உரிமைதொகை, தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தில் வழங்கப்படும் தொகைகள் உயர்த்தி வழங்கப்படும்.

அதிமுக பிரிட்ஜ் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்கள். ஆனால் அந்த கூட்டணி வாஷிங் மெஷின் தான் கொடுப்போம் என கூறியிருக்க வேண்டும் காரணம் அந்த கூட்டணியில் உள்ள பா.ஜ.க என்கிற வாஷிங் மெஷின் தவறு செய்தவர்களை தூயவர்கள் என மாற்றும் வகையில் தவறுகளை மறைக்க கூடியது.

இன்று திமுக அளித்த வாக்குறுதியில் 8000 ரூபாய் கூப்பன்
வழங்கப்படும் அதில் உங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ளலாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடுவார்கள் ஆனால் அதை நிறைவேற்றமாட்டார்கள்.

2016 ல் அதிமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப அட்டதாரர்களும் செல்போன் வழங்கவில்லை அவர்கள் வழங்கவில்லை, அதை அவர்களும் மறந்து விட்டார்கள் நாமும் மறந்து விட்டோம்.

அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும் என்றார்கள் அதை வழங்கவில்லை.

மக்கள் மறந்து விடுவார்கள் என கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

ஆனால் இன்று திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாது என அவர்கள் பேசுகிறார்கள்.

பா.ஜ.க தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள், மத நல்லிணகத்திற்கு எதிரானவர்கள், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிப்பவர்கள் அவர்களோடு தான் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்தால் மக்களை க்யூவில் நிறுத்துவது தான் அவர்கள் வேலை.

500, 1000 செல்லாது என மக்களை க்யூவில் நிறுத்தி வைத்தார்கள், பின் கொரொனாவில் ஆக்ஸிஜனுக்காக நிறுத்தி வைத்தார்கள்.

இன்று பெட்ரோல் டீசலுக்கு க்யூவில் நிற்கிறோம், சிலிண்டருக்கு க்யூவில் நிற்க வேண்டுமோ அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையெல்லாம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
ஆனால் இதை கேள்வி கேட்டு மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என இருப்பவர் மு.க.ஸ்டாலின்.

மக்களுக்கான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க கூடிய இயக்கம் திமுக.

திமுக ஆட்சியில் 4000 கோவிலுக்கு குட முழுக்கு செய்யப்பட்டுள்ளது. 7500 ஏக்கர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

நாங்கள் கோவிலை பாதுகாக்கிறோம் ஆனால் அவர்கள் கோவிலை பயன்படுத்தி மதக்கலவரத்தை உருவாக்குகிறார்கள்.

என்.டி.ஏ கூட்டணி சுய நலக்கூட்டணி அவர்கள் மக்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.

ஹிந்தி சமஸ்கிருதத்திற்கு கோடி கோடியாக நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால் தமிழ் மொழிக்கு நிதி மிகவும் குறைவாக ஒதுக்குகிறார்கள். தமிழ்நாட்டில் எந்த திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்றுவதில்லை

திமுக ஆட்சிக்கு வந்த உடன் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் .யாரும் எங்களுக்கு பேருந்து வேண்டும் என கேட்க வேண்டாம் நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே பேருந்து வந்து விடும்.

கொடுக்காத வாக்குறுதியையும் நிறைவேற்றி தரும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

நம் மீது இந்தியை திணிக்கிறார்கள். உலகத்தை தன் கையில் வைத்து கொண்டிருப்பவர்களாக நம் வீட்டுப் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இரு மொழி கொள்கையை பின்பற்றுகிறோம்.

நம் மொழி, சுயமரியாதையை பாதுகாக்க தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைய திமுகவிற்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *