Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களில் ஸ்டார்ட்அப் கருத்தரங்கம்!

இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களில்
“நவீன தலைமுறைக்கான புதுமை தொழில் சிந்தனை”
சிறப்பு கருத்தரங்கம்
இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் இயக்கம் (Startup TN) மற்றும் இந்திரா கணேசன் அறக்கட்டளை – தொழில் தொடக்க முன் வளர்ப்பு மையம் (Pre-Incubation Center) இணைந்து, “நவீன தலைமுறைக்கான புதுமை தொழில் சிந்தனை” (Startup Mindset for a Smart Generation) என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் 10.02.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோரை தொழில் தொடக்க உலகிற்கு தயார்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு. ஜி. இராஜசேகரன் அவர்கள் துவக்க உரை வழங்கினார். தனது உரையில், இன்றைய இளம் தலைமுறையினர் கல்வியுடன் மட்டுமல்லாமல் புதுமையான சிந்தனை, சுய தொழில் முனைவு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் வளர வேண்டும் என்பதைக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அவர் தனது உரையில், ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில் முனைவு ஆகியவை கல்வி நிறுவனங்களில் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து, நிறுவனங்களின் பதிவாளர் டாக்டர் எம். அனுசுயா அவர்கள் நிகழ்ச்சி முன்னோட்ட உரை வழங்கினார். அவர் இந்த கருத்தரங்கின் நோக்கங்கள், தமிழ்நாடு ஸ்டார்ட்அப் இயக்கம் மற்றும் தொழில் தொடக்க முன் வளர்ப்பு மையம் வழங்கும் ஆதரவுகள், மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய வழிகாட்டுதல், நிதி வாய்ப்புகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் பயன்கள் குறித்து விரிவாக விளக்கினார்.


இந்த நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக, திரு. எம். கார்த்திகேயன்,
மாவட்ட திட்ட மேலாளர் – EDII-TN (திருச்சி மாவட்டம்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், தொழில் தொடக்கத்திற்குத் தேவையான மனப்பாங்கு, யோசனை உருவாக்கம், சந்தை ஆய்வு, அரசின் உதவித் திட்டங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் டிஎன், EDII-TN போன்ற அமைப்புகள் வழங்கும் பயிற்சி மற்றும் ஆதரவுகள் குறித்து விளக்கினார். இளம் தலைமுறையினர் தோல்வியை அஞ்சாமல் புதுமையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும், சரியான வழிகாட்டுதல் கிடைத்தால் ஒவ்வொரு மாணவரும் வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த கருத்தரங்கு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு புதிய சிந்தனை, தொழில் முனைவு மனப்பாங்கு மற்றும் ஸ்டார்ட்அப் வாய்ப்புகள் குறித்த பயனுள்ள விளக்கங்களை வழங்கியது. கலந்துகொண்ட அனைவருக்கும் இந்த நிகழ்ச்சி தொழில் தொடக்க உலகைப் புரிந்துகொள்ளும் வகையில் ஊக்கமளிப்பதாக அமைந்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *