Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பிரமிக்க வைத்த நாய்கள் கண்காட்சி – பரிசுகளை தட்டி சென்ற உரிமையாளர்கள்

Pet Galaxy நிறுவனர்களான Dr.S.கணேஷ் குமார் மற்றும் S.Nithya ஆகியோர் ரோட்டரி கிளப் ஆஃப் பட்டர்ஃபிளைஸ் மற்றும் RID 3000 இல் உள்ள சில கிளப்களுடன் இணைந்து “ஆல் ப்ரீட்ஸ் நாய் கண்காட்சி” விக்னேஷ் குழுமத்தின் விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

இந்த ஞாயிற்றுக்கிழமையை செல்லப்பிராணி பிரியர்களுக்கு சொர்க்கமாக மாற்றியது. ” அனைத்து இன நாய்க் கண்காட்சி” என்ற மெகா நிகழ்வை திருச்சி மக்கள் முதன்முறையாக கண்டுகளிக்கிறார்கள். இந்த சாதனையை “PET Galaxy” செய்தது. இந்த கண்காட்சியில் 40 வகை நாய்களை சேர்ந்த 165 நாய்கள் இந்த மெகா ஷோவில் பங்கேற்றன.

கெளரவ நீதிபதிகள் டாக்டர்.ஜே. வெங்கடேஷ், டாக்டர்.ஏ.பத்மாவதி மற்றும் டாக்டர் எஸ்.சங்கர் மற்றும் இரண்டு இரண்டாம் ரன்னர்கள், இரண்டு முதல் ரன்னர்கள் மற்றும் 1 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். வெற்றியாளருக்கு 25,000 ரூபாயும், இரண்டாம் இடத்துக்கு 15,000 ரூபாயும், மூன்றாம் இடத்துக்கு 10,000 ரூபாயும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள் Dy. கமாண்டன்ட் ஹரேஷ் சிங் நாயக் திருச்சி விமான நிலையம், டிஎஸ்பி அறிவழகன், இன்ஸ்பெக்டர் கிள்ளிவளவன், ஜிவிஎன் மருத்துவமனை எம்டி டாக்டர் செந்தில் மற்றும் ஜிவிஎன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சக்தி யேதர் மற்றும் ரோட்டரி தலைவர்கள் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *