Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

புதுமையாக யோசித்தால் வெற்றி நிச்சயம்-சுதாதேவி

அலங்காரம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது இன்றைய கால பெண்கள் தங்களது திருமண நிகழ்ச்சிகளில் எல்லோரையும் விட சிறப்பாக தெரிய வேண்டும் என்று பிரத்தியேக முயற்சிகளை மேற்கொள்கின்றனர்..

 ஆடைகள் தொடங்கி ஆபரணங்கள் வரை எல்லாவற்றிலும் தனித்து தெரிய வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பமாய் இருக்கிறது

அதேபோல மணப்பெண்களுக்கு இணையாக இப்போது அவர்களது நண்பர்களும் உறவினர்களும் தங்களை அழகாய் காட்ட எண்ணுகின்றனர்.

 அந்த வகையில் பெண்களின் நகைகளில் தனித்துவத்தை கொண்டு வர வேண்டும் என்று இமிடேஷன் நகைகளுக்கு பதிலாக ஒரு கிராம் தங்கம் பூசப்பட்ட நகைகளை தயாரித்து அசத்தி வருகிறார் திருச்சியை சேர்ந்த சுதாதேவி 

இது குறித்த அவர் பகிர்ந்து கொள்கையில்,

சிறுவயதிலேயே எனக்கு இது போன்ற நகைகள் மீது அதிக ஆர்வம்..   என் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சென்ற பொழுது என் ஆடைகளுக்கு ஏற்றவாறு ஆபரணங்கள் அணிவது என்னுடைய வழக்கமாக இருந்தது அது எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது.

 நாளடைவில் என் நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் எங்கு வாங்குகிறீர்கள் எல்லா ஆடைகளுக்கும் ஏற்றவாறு எப்படி கிடைக்கிறது 

 என்று பல கேள்விகள் எழுப்பினர் அப்பொழுதுதான் என் கணவர் ஜெய்சூரி இதையே உன் தொழிலாக மாற்றிக்கொள் என்று கூறினார். 

பிடித்தவற்றை நம் தொழிலாக செய்யும் பொழுது கூடுதல் ஆர்வமும் உழைப்பும் நம் ஈடுபாடும் இருக்கும் எனவே இதை செய்யலாம் என்று அவர் கூறியவுடன் நானும் அதில் முயற்சிக்க ஆரம்பத்தேன்.

 ஆனால் திருச்சியில் இதற்கான உபகரணங்கள் வாங்குவது அவ்வளவு எளிதாக இல்லை எனவே ஹைதராபாத் சென்னை போன்ற பெரும் நகரங்களுக்கு சென்று இந்த நகைககள் தயாரிப்பு குறித்து கற்றுக் கொண்டேன் ..

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் விரும்பும் டிசைன்கள் செய்து கொடுப்பதால் எனக்கான தனித்துவங்கள் கிடைக்க ஆரம்பித்தது அவர்களின் ஆதரவால் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக செய்து வருகிறேன் 

சிலருக்கு ஒரு கிராம் கோல்டு நகைகள் வாங்குவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் அதனை வாடகைக்கும் வழங்கி வருகிறேன் ..

Https://www.instagram.com/sudha_bridal_jewellers?igsh=MXM1eTR3a2trNmZwMg%3D%3D&utm_source=qr

இமிடேஷன் நகைகளுக்கு மத்தியில் இது போன்ற புதுவிதமான நகைகள் அணிவதில் பெண்களும் ஆர்வம் காட்டி வருகின்றன அந்த வகையில் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே அதிக பேர் இதை விரும்ப ஆரம்பித்தனர்

நமக்கு பிடித்தவற்றை தேர்வு செய்து செய்யும் பொழுது இன்னும் வெற்றி என்பது எளிதில் கிடைக்க கூடியதாக இருக்கின்றது ஆனால் அதற்கான முயற்சியும் உழைப்பு மிக முக்கியமானது எப்போதும் சோர்வடையாமல் நம் இலக்கை நோக்கி பயணித்தால் நமக்கான தனி அடையாளம் கிடைக்கும்  என்கிறார் சுதாதேவி

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *