தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்டத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 100% வாக்குப்பதிவை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீரங்கம் தொகுதியில் வங்கி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வாக்கு பதிவு அவசியத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.. திருச்சி மேற்கு தொகுதியில் காஜாமலை பகுதியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவெறும்பூர் தொகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பேரணி நடத்தி வாக்காளர் விழிப்புணர்வை பரப்பினர். முசிறி தொகுதியில் சந்தை பகுதியில் காய்கறிகள் மூலம் ‘100% வாக்களிப்பு’ குறியீடு உருவாக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வழங்கப்பட்டது.லால்குடி மற்றும் மணச்சநல்லூர் தொகுதிகளில் சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு வாக்கு பதிவு முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பல இடங்களில் உறுதிமொழி ஏற்பும் நடைபெற்றது.

“வாக்களிப்பு திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” என்ற கோஷத்துடன் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
திருச்சியில் 100% வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு SVEEP விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரம்



Comments