Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

தமிழ்நாட்டை பசுமையாக மாற்றலாம் – எதிர்காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம்

தமிழ்நாடு அரசு நினைத்தால் எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம்!. நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண்துறை அலுவலர்களின் கனிவான கவனத்திற்கு சிறு பதிவு. தமிழ் நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கள் – 37. நகராட்சிகள் – 148. பஞ்சாயத்து யூனியன்கள் – 385. டவுன் பஞ்சாயத்துகள் – 528. கிராம பஞ்சாயத்துகள் – 12,618. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் குறைந்தது 5 குக்கிராமங்கள் இருக்கும். அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம்” நடைமுறையில் உள்ளது.

இந்த 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிவோர் மூலம், மாதம் ஒரு செடி மட்டுமே நட்டு பராமரித்து வந்தால் போதும் !. நம் கிராமங்கள் பசுமையான கிராமங்களாக மாறிவிடும். எடுத்துக்காட்டாக : 12,618 கிராம பஞ்சாயத்துகளில்,100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் 50 பேர் பணிபுரிகிறார்கள் எனில் :- 12,618 × 50 = 6,30,900 நபர்கள் மாதம் ஒரு செடி நடவு எனில் 6,30,900 எனில் 12 மாதங்களுக்கு 6,30,900 × 12 = 75,70,800. செடிகள். கற்பனை செய்ய முடியாத எண்ணிக்கை ! தமிழ்நாட்டை பொறுத்த வரை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் மழைக்காலங்கள் ! இந்த காலங்களில் செடி நடவு செய்து ஒரு வருட காலம் பராமரித்தால் போதும்.

பின்னால் மரங்கள் வேர்களில் சேமித்து வைத்துள்ள ஈரத்தன்மையால் தானாக வளர்ந்து விடும். இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து, நமக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தில் செடிகள் நடவு செய்ய தேவைப்படும் செடிகள், வனத்துறை, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியோர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த பதிவை காணும் மேற்குறிப்பிட்ட மூன்று துறை அலுவலர்கள், கிராமங்களில் நடைபெறும் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணியாளர்களை பயன்படுத்தி, (ஒரு பஞ்சாயத்திற்கு, வருடத்திற்கு 500 செடிகள் எனக் கணக்கிட்டு) கிராமங்களில் மரம் வளர்ப்பு குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்து, உண்மை நிலையை தெரிவித்து, ஒப்புதல் பெற்றால், இத்திட்டம் நூறு சதவிகிதம் வெற்றி பெற்று, நம் நாட்டை வறட்சியிலிருந்து காப்பாற்றலாம்!.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *