தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறும் வெல்லும் பெண்கள் திமுக மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமான மூலம் புறப்பட்டு இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று மாலை நடைபெறும் மகளிர் அணி மாநாட்டில் பங்கே இருக்கிறார்.
திருச்சி விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதல்வரை அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மெய்ய நாதன், ரகுபதி, கோவி. செழியன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, அ.ராசா, துரை வைகோ, அருண் நேரு, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன்,
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments