திருச்சி மாவட்டம் லால்குடி சிவன்கோயில் திடலில் தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திமுக மத்திய மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் வைரமணி தலைமையில் நடைப்பெற்றது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி இக்கூட்டத்தில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் புருஷோத்தமன் வரவேற்புரையாற்றினார். நகர்மன்ற தலைவரும், நகர செயலாளருமான துரைமாணிக்கம் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு அரசு மாநில வளர்ச்சி கொள்கை குழு துணை தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக கிளை நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy vision







Comments