எந்த அரசு பதவியிலும் இல்லாத விஜய் செய்தது ஊழல் கிடையாது. எதை வைத்து விஜய் ஊழல் செய்தார் என எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார் என தெரியவில்லை. அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
வரி ஏய்ப்பு என பொத்தாம் பொதுவாக கூற கூடாது. காலம் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது அதை சட்டப்படி எதிர்த்து மனு தாக்கல் செய்தோம். நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.
கூட்டணியை நம்பி த.வெ.க தொடங்கப்படவில்லை. இருந்தாலும் கூட்டணி குறித்து இறுதி முடிவை விஜய் அறிவிப்பார்.
அரசியல் கட்சிகள்ப் கூட்டம் நடத்துவது தொடர்பாக வழிக்காட்டல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக கூட்டம் நடத்தினால் உடனடியாக அவர்களுக்கு அனுமதி கிடைக்கிறது. த.வெ.க வை பார்த்து திமுகவிற்கு பயம் வந்து விட்டது. அதனால் விஜய் மக்களை சந்திப்பதை தடுக்க முயற்சிக்கிறார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments