இந்தியாவின் முதல் ஆசிரியை என அழைக்கப் படும் ‘சாவித்திரி பாய் புலே’ பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட காணொலி:
சாவித்திரி பாய் புலே இந்தியாவின் நவீன கல்வி மற்றும் பெண் கல்வியின் அன்னை எனப் போற் றப்படுபவர். அவர் இந்தியாவின் முதல் ஆசிரியையாக ஆனது மட்டுமல்லாமல் தன்னிடம் படித்த 417 மாணவர்களை ஆசிரியர்களாக உரு வாக்கியிருக்கிறார்.
அந்த 417 ஆசிரியர்களும் பல்லாயிரம் அறி வார்ந்த மாணவர்களை உருவாக்கி இருப்பார்கள். அந்த பல்லாயிரம் மாணவர்கள் பல லட்சம் மாண வர்களுக்கு கல்விக் கற்றுக்கொடுத்திருப்பார்கள். இதுதான் கல்வியின் சக்தி! ஆசிரியப் பெருமக்களின் பலம்!
சாவித்திரிபாய் புலே மிகச்சிறந்த கல்வியாளர் மட்டுமல்லாமல், மிகப்பெரும் சமூக சீர்திருத்தவா தியாகவும் திகழ்ந்தார்.
பெண் சிசு கொலையைத் தடுக்கப் போராடினார், மராட்டிய மொழியின் கவிதை இலக்கியத்தில் மாபெரும் திருப்புமுனை யைத் தந்தவர் சாவித்திரிபாய் புலே. ஆம்; அவர் கவிஞராகவும் திகழ்ந்தார்!
சாவித்திரிபாய் புலே பெயரில் ஆசிரியைக ளுக்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்க நட வடிக்கை மேற்கொள்வோம். இதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வோம் என உறுதிய ளிக்கிறேன்.
சாவித்திரிபாய் புலே போன்ற புரட் சியாளர்களை என்றும் போற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
இறுதியாக தமிழ்நாடு உறுதி அளிப்பு ஓய்வூதிய திட்ட அறிவிப்புக்காக சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருந்தர் நிகழ்வு முடிந்ததும் சென்னையில் இருந்து திரும்பி
நிகழ்ச்சி முடியும் தருவாயில் சாவித்திரி பாய் புலே’ பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சாவித்திரி பாய் புலே அவர்களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments