திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த சிக்கத் தம்பூர் ஏரியில் மீன் பிடிப்பதற்காக ஒட்டம்பட்டி பஜனை மடத்தெருவை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் நாகராஜ் மற்றும் அவரது உறவினர் மகன்களான பிரதீப் (10), நித்தீஷ் (12) மற்றும் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன்களான ராகேஷ் (14), சரண் (11) ஆகியோருடன் ஏரியில் மீன்பிடிக்கச் சென்றார்.
மேலும் ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (22), சின்னதுரை (25) உள்ளிட்ட 7 பேரும் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. இதனால், மீன் பிடித்துக் கொண்டிருந்த அனைவரும் அருகே உள்ள புளியமரத்திற்கு அடியில் சென்று ஒதுங்கினர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் அருகில் நின்று கொண்டிருந்தவர்களும் கீழே விழுந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மீட்கப்பட்டு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேருக்கும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் பிரதீப் என்ற சிறுவனை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதில் 5 பேரும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் இடி தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments