பிரபல ஐஸ்கிரீம் கடை, துணிக்கடை, மற்றும் உணவகத்திற்கு தற்காலிக தடை
பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து மத்திய தபால் நிலையம் எதிரில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் நிறுவனம் மற்றும் மெயின் கார்டு கேட்டில் உள்ள பிரபல துணிக்கடையில் உள்ள உணவகம் ஒன்றிலும் ஆய்வு செய்யததில்
அந்த இரண்டு உணவகத்தின் உணவு தயாரிக்கும் இடங்கள் மிகவும் அசுத்தமாகவும், சுகாதாரமற்ற முறையிலும் எலிகள் மற்றும் கரப்பாண் பூச்சிகள் வந்து செல்லும் வண்ணம் இருந்ததும் கண்டறியப்பட்டு அந்த இரண்டு உணவு கூடத்தின் விற்பனை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த இரண்டு கடைகளுக்கும் அங்குள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் பிரிவு 55-இன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த குறைகளை நிவர்த்தி செய்த பின்னரே உணவு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு சட்டபூர்வ உணவு மாதிரியும், அபராத தொகையும் விதிக்கப்பட்டது. தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் இருந்த உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்துவந்த நந்திகோயில் அருகில் உள்ள பிரபல டீ கடை மற்றும் பேக்கரி நியமன அலுவலர் உத்தரவின் பேரில் சீல் செய்யப்பட்டது.
மேலும், பொதுமக்கள் அனைவரும் உணவு விற்பனை செய்யும் இடங்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் விற்பனை செய்தாலோ, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
புகார் எண் : 99 44 95 95 95 / 95 85 95 95 95
மாநில புகார் எண் : 9444042322

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments