திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கண்ணுக்குழியை சேர்ந்தவர் சின்னையா மகன் ஆனந்தன் (34). இவர் ஹைதராபாத் நகரில் பொட்டுகடலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

 விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தவர் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு இறைச்சி வாங்குவதற்காக தனது காரில் இலுப்பூர் வரை சென்றவர் வீடு திரும்பியுள்ளார். திருநாடு – ஊனையூர் சாலையில் மருதப்பட்டி அருகே வந்தபோது, காரை இயக்கத்திலேயே நிறுத்திவிட்டு இயற்கை உபாதைக்காக காரை விட்டு ஆனந்தன் இறங்கியுள்ளார்.

 பின் கார் திரும்பிய ஆனந்தன் காரிலிருந்து அதிக அளவில் புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனந்தன் நிதானமடைவதற்குள் கார் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.
பின் கார் திரும்பிய ஆனந்தன் காரிலிருந்து அதிக அளவில் புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனந்தன் நிதானமடைவதற்குள் கார் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து 108 மூலம் ஆனந்தன் அளித்த. தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு சென்ற நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான இலுப்பூர் தீயணைப்புத்துறை வீரர்கள், எரிந்துக்கொண்டிருந்த காரை தண்ணீர் பாய்ச்சி அணைத்தனர்.
 இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கார் எரிந்த காரணம் குறித்து வளநாடு போலீஸார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கார் எரிந்த காரணம் குறித்து வளநாடு போலீஸார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           129
129                           
 
 28 February, 2022
 28 February, 2022

Comments