
கடந்த முறை நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் விவசாய பயிர்களை நாசம் செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளிடம் ஆட்சியர் வலியுறுத்தினார்.
அதன் நிலை குறித்து இன்று கேட்க முற்படும்பொழுது திருச்சி உதவி வனக்கோட்ட அலுவலர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு  வரவேண்டும் என்று ஆட்சியர் உத்தரவையும் ஏற்காமல் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அதனால் வனசரகர்களை பார்த்து கூட்ட அரங்கை விட்டு வெளியேற மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டது சிறிது நேரம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பு  ஏற்ப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியிரிடம் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…… https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments