திருச்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே 2 நபர்கள் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தனர் பின்னர் அவர்கள் வைத்திருந்த கஞ்சாவை சிகரெட்டில் வைத்து புகைத்து கொண்டிருந்தனர். இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் அந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது நாங்கள் பெரம்பலூரை சேர்ந்த விக்னேஷ், வேல்முருகன் என்றும், கஞ்சா வாங்குவதற்காக இங்கு காத்திருக்கிறோம் என்று அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.இதனை அடுத்து பிடிபட்ட இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்பவருக்கு போன் செய்யும்படி கிராம இளைஞர்கள் தெரிவித்தனர் உடனே கஞ்சா வியாபார செய்யும் பெண் கஞ்சா வியாபாரியிடம் வாங்க வந்த இளைஞர் போனில் பேசினார்.
சிறிது நேரத்தில் பெண் கஞ்சா வியாபாரி, ஆறுமுகம் என்பவரிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பினார். புங்கனூர் சாலையில் கஞ்சா வாங்க வந்த இளைஞனிடம் ஆறுமுகம் என்பவர் புல்லட்டில் கஞ்சாவை கொடுக்க வந்தார். அப்போது மறைந்திருந்த கிராம இளைஞர்கள் கஞ்சா வியாபாரி ஆறுமுகத்தை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் ஆறுமுகம் புல்லட்டை சாலையின் நடுவே போட்டு விட்டு கருவேல மர காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டான்.
இதனை தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் விரட்டி சென்று ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தகவலறிந்த உதவி ஆய்வாளர்கள் பாலன் மற்றும் குமார் ஆகிய இருவரும் கஞ்சா வாங்க வந்த விக்னேஷ், வேல்முருகனிடம் பிடித்து விசாரித்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் விரட்டி பிடித்த கஞ்சா வியாபாரி ஆறுமுகத்தை அமர்வு நீதிமன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் எஸ்ஐ பாலன் புங்கனூர் எங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது இல்லை என்று ஆறுமுகத்தை பிடித்து செல்லாமல் நின்று கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து எஸ்ஐ பாலனிடம் பேசி தீர்த்துக்களாம் என்று கூறி ஆறுமுகத்தை அழைத்து சென்றனர். இதைக் கண்ட புங்கனூர் கிராம இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கஞ்சாவையும் விற்க வந்த வரையும் பிடித்து காவல்துறை நிலம் ஒப்படைத்தால் ஏதோ ஒரு காரணம் சொல்லி அவர்களைப் பிடித்து விசாரணை செய்யாமல் அந்த நபரை விடுவித்து அலட்சியமாக சென்று விட்டனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாரே அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது போல் நடந்து கொண்ட போலீசாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி கஞ்சா வியாபாரியை கைது செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments