திருச்சி சோமரசன்பேட்டை எம்ஜிஆர் சிலை அருகே திடலில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இல்ல திருமண விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று நடத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
முதல்வர் திருமணத்தை நடத்தி வைத்து பேசி முடித்துவிட்டு புறப்பட்டவுடன் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்வர் வருகைக்காக வாழைத்தார், கரும்பு உள்ளிட்டவைகள் அலங்கார வளைவுகளாக அமைக்கப்பட்டிருந்தன. அதனை வந்திருந்த போது மக்கள் வாழைத்தார்களை உடைத்து எடுத்தும் கரும்புகளை பிடுங்கி தலையில் வைத்துக் கொண்டு சென்றனர்.
கிராமப்புற பகுதி என்பதால் ஏராளமான பெண்கள் கரும்பு வாழைத்தாறுகளை சுமந்து செல்லும் காட்சிகளை காண முடிந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments