திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே காவல் நிலையத்திற்கும் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை இடித்துத் தள்ள வேண்டும் என டாக்டர். மோடி பரணி என்ற பெயரில் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, துணை ஆணையர் அன்பு உள்ளிட்டோர் ஸ்ரீரங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. யார் இதை பதிவிட்டது என்பது குறித்து சைபர் சிறப்பு காவல்படை போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில்…. ராமநாதபுரம் திருவாடானை பகுதியை சேர்ந்த பரணி என்பதும், அவரை கைது செய்ய திருச்சி மாநகர காவல்துறையினர் விரைந்தனர்.
இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவில் முன் உள்ள பெரியார் சிலையை கூடிய விரைவில் உடைப்பேன், உடைத்தே தீருவேன் என X -தளத்தில் பதிவிட்ட பரணியை ஈரோட்டில் பெருந்துறையில் கைது செய்து திருச்சி அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சனாதனம் விவகாரம் தற்போது விவாதத்துக்குள்ளாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பரணியின் பதிவு திருச்சியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments