திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரிய மிளகுப்பாறை பகுதியில் இருக்கும் புத்தடி மாரியம்மன் கோவில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு வாலிபர்கள் கோயிலுக்கு புகுந்து உண்டியலை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவில் இருக்கும் உண்டியலை முதலில் உடைக்க முயற்சி செய்த சத்தம் கேட்டது. இதனை அடுத்து உடைக்க முடியாத நிலையில் உண்டியலை இரண்டு வாலிபர்கள் எடுத்து சென்றனர். உண்டியலை உடைக்கும் காட்சிகள், எடுத்துச் செல்லும் காட்சிகள் இரண்டு நபர்கள் கோயிலை சுற்றி வருவது கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது.

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு இந்த கோயிலில் உண்டியலில் உள்ள உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்யப்பட்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உண்டியலை உடைத்து பணத்தை எடுக்க முடியாத நிலையில் உண்டியலை தூக்கிக்கொண்டு இருவரும் ஓடி ஓடி ஓடிவிட்டார்கள். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments