திருச்சி திருச்செந்துறை கிராமத்தில் 389 ஏக்கர் பரப்பளவில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடம் என முறையிடப்பட்டது. பத்திர பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் அனைவரும் தொடர் போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை இறுதியில் திருச்செந்துறை கிராமத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை நிலங்களை வாங்கவும் விற்கவும் செய்யலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு வக்பு வாரியம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments