Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூர்: பள்ளிவாசலில் இஸ்லாமிய மக்களிடம் அன்பில் மகேஷ் வாக்கு சேகரிப்பு!

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை திருவரம்பூர் தெற்கு ஒன்றியத்துக்கு உடபட்ட
பகுதிகளில் துவக்கி பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார் மேலும் இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 40-வது வார்டுக்கு உட்பட்ட குத்தாய்ப்பால் ரோட்டில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த முகமதியா பெரிய பள்ளிவாசலில்

மதியம் ஜிம்மா தொழுகையை முடித்து பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்த இஸ்லாமிய சகோதரர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் மேலும் இதனை அடுத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறியும், கடந்த ஆட்சி காலத்தில் இந்த வாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்ததையும் எடுத்துரைத்தும் ஆதரவு திரட்டினார்.

மேலும் இந்த வாக்கு சேகரிப்பின் போது மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் சிவகுமார், வட்டச் செயலாளர் கள் குணாநிதி, வி ப கருணாகரன், மாநகர நிர்வாகிகள் அசாருதீன், குறிஞ்சி மன்னன் உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமான உடன் இருந்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *