திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பூசத்துரை பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் நெல் போட்ட பணத்தை எடுத்து வந்த விவசாயிடமிருந்து ரூ2,50,000 ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்
தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் அன்பளிப்பு பொருட்கள் வழங்குவதை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே கண்காணிப்பு குழுக்களை அமைத்து ரூபாய் 50,000 க்கு மேல் உரிய ஆவணம் இன்றி ரொக்கத்தை எடுத்துச் செல்பவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வதோடு பரிசுப் பொருட்களையும் எடுத்துச் சென்றால் அவற்றை பறிமுதல் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பூசத்துறை பகுதியில் எப் எஸ்டி தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில்ஈடுபட்ட பொழுது அந்த வழியாக வந்த காரை பரிசோதிக்கப்படுது திருச்சி சஞ்சீவி நகர் பொன்மணி நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த சத்யா (47) என்ற பெண்மணி தான் விவசாயம் செய்து அதில் நெல் மூட்டைகளை விலைக்கு போட்டதில் கிடைத்த ரூ 2,லட்சத்து 50 ஆயிரம் எடுத்து வந்துள்ளார்.

அதற்கு உரிய ஆவணம் இல்லை எனக் கூறி அதனை தேர்தல் பறக்கும்படை அதிகாரி நாகலட்சுமி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து திருவெறும்பூர் தாசில்தாரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments