மாநிலங்களவை உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளருமான எம். கிறிஸ்டோபர் திலக், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்
அரசியலில் தனிமனிதத் தாக்குதல் கூடாது. சீமான் சில்லறைத்தனமாகப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்த்தேசியம் என்கின்ற போர்வையில் ஒளிந்துகொண்டிருக்கக்கூடிய ஒரு இந்துத்துவா சக்திதான் செந்தமிழன் சீமான். திரள்நிதியை மையப்படுத்தி அவர் கூவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் நலனுக்காகவும் தமிழர்களின் நலனுக்காகவும் அவரோடு இருந்தவர்கள், நாம் தமிழர் கட்சியை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள். தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள், தமிழ்நாட்டில் வாழும் ஆதித்தமிழர்களுக்காகக் கண்ணீர் வடிப்பது இல்லை.
பொது மேடையில் ‘என் வாயில் நல்லா வந்துவிடும்’ என்ற தவெக தலைவர் விஜய்யின் பேச்சை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது கண்டிக்கத்தக்கது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

சட்டமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும்.
ஆட்சிக்கு வந்துள்ள புதிய கட்சி, புதிய முதல்வர் அதை முன்னெடுப்பார் என நம்புகிறேன். சட்டமன்றத்தில் உடனுக்குடன் பதிலளிப்பதற்குப் புதிய முதல்வர் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

மோடி, அமித்ஷா ஆகியோரை வைத்துத் தமிழ்நாட்டில் படம் எடுத்தார்கள், அது ஓடவில்லை. எனவே, அண்ணாமலையை வைத்துப் புதிய படம் தயாரிக்கிறார்கள் என நினைக்கிறேன் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav




Comments