திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 06.04.2026 அன்று பரவலாக மழை பெய்துள்ளது. லால்குடி தாலுகாவில் புள்ளம்பாடியில் அதிகபட்சமாக 77.2 மி.மீ மழையும், நந்தியார் தலைப்பு பகுதியில் 70.6 மி.மீ, கல்லக்குடியில் 60.4 மி.மீ மற்றும் லால்குடியில் 20.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மண்ணச்சநல்லூர் தாலுகாவில் சமயபுரத்தில் 54 மி.மீ, சிறுகுடியில் 52 மி.மீ, தேவிமங்கலத்தில் 30.2 மி.மீ மற்றும் வாத்தலை அணைக்கட்டில் 4.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

திருச்சி கிழக்கு பகுதியில் திருச்சி விமான நிலையத்தில் 32.2 மி.மீ மற்றும் பொன்மலையில் 29.2 மி.மீ மழையும், திருச்சி மேற்கு பகுதியில் திருச்சி சந்திப்பில் 27.1 மி.மீ மற்றும் திருச்சி நகரத்தில் 24 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. திருவெறும்பூர் தாலுகாவில் துவாக்குடி IMTI பகுதியில் 40.2 மி.மீ மழையும், ஸ்ரீரங்கம் தாலுகாவில் நவலூர் குட்டப்பட்டில் 13 மி.மீ மழையும் பெய்துள்ளது.
மணப்பாறை தாலுகாவில் பொன்னையார் அணையில் 8.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது, ஆனால் மணப்பாறையில் மழை இல்லை. மருங்காபுரி தாலுகாவில் மருங்காபுரியில் 5.4 மி.மீ மற்றும் கோவில்பட்டியில் 4.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. துறையூர் தாலுகாவில் கொப்பம்பட்டியில் 7 மி.மீ மழை பதிவான நிலையில், தென் பரநாடு மற்றும் துறையூர் பகுதிகளில் மழை பெய்யவில்லை. முசிறி தாலுகாவில் புலிவலத்தில் 3 மி.மீ மழை பதிவாகியுள்ளது, அதே சமயம் முசிறி மற்றும் தத்தையங்கார்பேட்டை பகுதிகளில் மழை பதிவாகவில்லை. மாவட்டத்தின் மொத்த மழைப்பொழிவு 563.5 மி.மீ ஆகவும், சராசரி மழைப்பொழிவு 23.48 மி.மீ ஆகவும் உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments