கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தமிழர் நல்லாசிப் பெற்ற திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதி கழகத்தின் வேட்பாளர்
திரு.G.ராஜசேகரன் B.E.,
08.04.2026 புதன்கிழமை
காலை 7:00 மணியளவில்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொறியாளர் க. ராஜசேகரன் பாலக்கரை பகுதியில் வருகின்ற 08 ஏப்ரல் 2026 அன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த பிரச்சாரமானது வார்டு 30, 30A, 30B மற்றும் 31A ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறுகிறது.
காலை நேரப் பயணத் திட்டம் 8.00 மணிக்கு VM பேட்டை மாரியம்மன் கோவிலில் தொடங்கி, துர்க்கை அம்மன் கோவில், ஜெயில் பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு, அம்பர்ஷா பள்ளிவாசல் அனைத்து தெருக்கள், ஜெயில் தெரு, பேலஸ் தியேட்டர், ஸ்டார் தியேட்டர் மெயின்ரோடு, குப்பாங்குளம்
குடிசைப்பகுதி வழியாகச் சென்று 10.30 மணிக்கு ரெங்கசாமி செட்டிதெருவில் 30வது வார்டு நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து 10.50 மணிக்கு 30 B பகுதியில் தொடங்கி, மைலம் சந்தை, பாய்கடை சந்து, பிள்ளைமாநகர் பகுதி, மதுரைவீரன் கோவில் தெரு வழியாகச் சென்று மதியம் 1.00 மணிக்கு இரட்சகர் புரத்தில் நிறைவடைகிறது.
மாலை நேரப் பிரச்சாரம் 4.35 மணிக்கு 30 A பகுதியில் தொடங்கி, வரகனேரி முஸ்லீம் தெரு, வரகனேரி சவேரியார் கோவில் சந்து, சின்ன மார்க்கெட் சந்து, பட்டமரத்து மாரியம்மன் கோவில் தெரு, ஆனந்தபுரம், மாமுண்டி சாமி கோவில் தெரு, மேட்டுத்தெரு வழியாகச் சென்று மாலை 6.00 மணிக்கு பிரான்சிஸ் படிப்பகத்தில் 30 A வார்டு நிறைவு பெறுகிறது. பின்னர் 6.15 மணிக்கு 31 A பகுதியில் தொடங்கி, சென்ட்ரல் தியேட்டர், பென்ஷனர் தெரு, ரம்பக்காரதெரு, சஞ்சய்ரோடு பள்ளிவாசல், ஒருக்கட்டான்மலை சந்து, வரிசை இராவுத்தர் சந்து, பெரியபாளையம், வள்ளுவர் தெரு, கல்பாளையம், குறிஞ்சியர் தெரு வழியாகச் சென்று இரவு 8.30 மணிக்கு சந்தனபுரத்தில் 31 A வார்டு பிரச்சாரம் நிறைவடைகிறது. நமது சின்னமான இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் இத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறுகிறது. .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments