மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி ,
தமிழ்நாடு முழுவதும் தற்போது ஏற்படும் அதிக மின் தடைகளை போர்க்கால அடிப்படையில் 10 நாட்களுக்குள் சரி செய்யும் பொருட்டு 19.06.2021 முதல் 28.06.2021 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்பார்வை பொறியாளர் திருச்சி மின் பகிர்மான வட்டம் பெருநகரம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருச்சி மாவட்டத்தில் 7 கோட்டங்களில் உள்ள 52 துணை மின் நிலையங்களில் 96 மின்னூட்ட பாதைகளில் கடந்த 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை சுமார் 500 களப்பணியாளர்கள் கொண்டு பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்பட்டு 2294 இடங்களில் மின் பாதை அருகில் மற்றும் கீழ் உள்ள மரங்கள் வெட்டப்பட்டும்.
238 இடங்களில் உள்ள பழுதடைந்த மின் கம்பி இணைப்புகள் சரிசெய்யட்டும் 40 இடங்களில் உள்ள தொய்வான மின் கம்பிகள் சரி செய்யப்பட்டும் 61 இடங்களில் உள்ள சாய்வான கம்பங்கள் நிமிர்த்தபட்டும் 100 இடங்களில் உள்ள பகுதி திறப்பான்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் மீதமுள்ள பணிகள் நாளை 28.06.2021-ஆம் தேதிக்குள் முடிக்க ஆவன செய்யப்பட்டுள்ளது என்றும் திருச்சி மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW







Comments