Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி விமான நிலைய நுழைவில் போக்குவரத்து சிக்னல்: துரை வைகோ

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்சி மாநகரம், திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய Traffic Signal அமைக்க வேண்டும் என்ற என் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று, அதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டதற்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாலை சந்திப்பில் (Road Junction) அதிக வாகன போக்குவரத்து நிலவி வரும் நிலையில் விபத்துகளை தவிர்க்க, 10.10.2025 அன்று நடைபெற்ற Airport Advisory Committee கூட்டத்தில் Airports Authority of India (AAI) இந்த கோரிக்கையை என்னிடம் வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, 12.10.2025 அன்று எழுத்துப் பூர்வமாகவும், 13.10.2025 அன்று நடைபெற்ற DISHA மற்றும் Road Safety Meeting-களிலும் இந்த பிரச்சினையை முன்வைத்து, உடனடி தீர்வு அவசியம் என்பதை நான் வலியுறுத்தியிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து, 17.01.2026 அன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு நான் அளித்த சமீபத்திய அதிகாரப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில், இந்த இடத்தில் Traffic Signal அமைக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் பாதுகாப்பாகவும், ஒழுங்காகவும் பயணம் செய்ய இந்த Traffic Signal பெரிதும் உதவும். விபத்துகளைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் எடுத்த இந்த நடவடிக்கை, மக்கள் நலன் சார்ந்த முக்கியமான முன்னேற்றமாகும்.

மக்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, துறைகள் ஒருங்கிணைந்து விரைவான நடவடிக்கை எடுத்த திருச்சி மாநகர காவல் துறையினருக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் என் நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *