திருச்சி மாவட்டம் தொட்டியம் அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வம் மகன் பிரித்திவிராஜ் (24). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இதே தெருவை சேர்ந்த கார்த்திகேயன். இவரது தம்பி அழகேசனின் 3 கோழிகள் திருட்டுப் போய் உள்ளது. இதை பிரித்திவிராஜ் தான் திருடி கொண்டு சென்று சந்தையில் விற்றதாகவும் அதை அரசலூரைச் சேர்ந்த தொழுப்பன் (எ) லாரன்ஸ் என்பவர் வாங்கியதாகவும் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கார்த்திகேயன் தொழுப்பன் (எ) லாரன்ஸ் இடம் சென்று விசாரித்த போது அதை சந்தையில் வாங்கியதாகவும், பிரித்தி விராஜிடம் வாங்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதை நம்பாமல் கார்த்திகேயன் இருந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு பிருத்தி விராஜ் தெரு வழியாக வந்த பொழுது அங்கே மறைந்திருந்த கார்த்திகேயன் கோழியை திருடி விட்டு பொய் சொல்கிறாயா என்று தான் மறைத்து வைத்திருந்த கக்தியை எடுத்து பிரித்விராஜ் வயிற்றின் வலது அல்லையில் குத்தி விட்டு தப்பிச் சென்றார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் கொண்டு சென்றனர். பிறகு அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து பிரித்திவிராஜ் அண்ணன் நடராஜ் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் இன்ஸ்பெக்டர் கதிரேசன் (பொ) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments