திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் மேல காவக்காரத் தெருவைச் சோந்தவா் திருநங்கை மணிகண்டன் என்கிற மணிமேகலை (28). இவா் நேற்று இரவு பிச்சாண்டாா் கோயில் ஊராட்சி வாழவந்தபுரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கரையோரத்தில் நின்றிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா்கள் சிலா் மணிமேகலையிடம் தகராறு செய்துள்ளனா்.

இதில் இளைஞா்கள் மணிமேகலையை கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு தப்பிஓடினா். இதுகுறித்து திருநங்கை சுகன்யா என்பவா் கொள்ளிடம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா், லால்குடி காவல் துணை கண்காணிப்பாளா் அஜய்தங்கம் உள்ளிட்ட போலீசார், மணிமேகலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருநங்கை மணிமேகலை கொலை செய்யப்பட்ட இடத்தில் கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments