கடந்த 01.06.1994 திருச்சி நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அன்றிலிருந்து கிட்டத்த 28 ஆண்டுகள் செங்கோல் இன்றி 5 பெண் மேயர்கள் பதவி வகித்தனர். இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாமன்ற கூட்டம் இன்று கூடியது. மாமன்ற மேயருக்கு செங்கோல் இல்லாத நிலையில் இருந்து வந்தது.
 இந்நிலையில் சேலம் ( வடக்கு ) சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன்  4 கிலோ எடையுடன் கூடிய 5 அடி உயரம் கொண்ட செங்கோல் நன்கொடையாக , நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கியிருந்தார்.

 அந்த செங்கோலை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தார். அதனை இன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு மாமன்றத்தில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் முன்னிலையில் மேயர் மு.அன்பழகனிடம் வழங்கினார்.

 இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, துணை மேயர் மேயர் திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டம்  கூச்சல் குழப்பம் இல்லாமல் நடைபெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

 31 Oct, 2025
31 Oct, 2025                           129
129                           
 
 29 March, 2022
 29 March, 2022

Comments