இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் ஸ்ரீரங்கம் மண்டல அலுவலகத்தில் பகுதி துணைச் செயலாளர் எஸ். கருணாகரன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ், மாணவர் பெருமன்றத்தின் மாநில தலைவர் க.இப்ராகிம், ஏ ஐ டி யு சி மாவட்ட பொருளாளர் ராமராஜ், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் அன்சர்தீன், மற்றும் பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி, எஸ்.பார்வதி எம்.ஆர். முருகன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 6க்கு உட்பட்ட திருவளர்ச்சோலையில் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தியும் மற்றும் மயானத்திற்கு செல்லும் சாலையை புனரமைத்து தரக் கூறியும் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments