திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெங்கநாதபுரம் பகுதியை பிரபாகரன் 36/23, த.பெ. பரமதயாளன், என்பவர் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருதாகவும், கடந்த 27.05.2023 அன்று நரசிங்கபுரம், பிள்ளையார் கோவில் அருகில் சட்டவிரோதமாக மணல் கடத்தவதாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று, பார்த்தபோது, 1. JCB, TN 48 AT 7023, 2. John Deer Tractor, TN 48 Y 0114, 3. Tipper, TN 48 A 5463
சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடிய

1. மகேஸ்வரன் 48/23, த.பெ. வன்னிமுத்து, பெருமாள் கோவில் செயின்ட், நரசிங்கபுரம், 2. தனபால் 48/23, த.பெ பெருமாள், 3. மணிகண்டன் 26/23, த.பெ.ராமகிருஷ்ணன், வடக்கு செயின்ட், நரசிங்கபுரம், துறையூர், 4. கந்தசாமி 35/23, த.பெ கணபதி, சாவடி, வடக்கு செயின்ட், கீழகுன்னம்பட்டி, துறையூர், 5.கீதா, தனபால், பெருமாள் கோயில் தெரு, நரசிங்கபுரம், 6. சுரேஷ், வைத்தியலிங்கம் என்பவர்களை தடுத்தி நிறுத்தி வாகனத்தை சோதனையிட்ட போது, மேற்படி அனைவரும் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் என்பவரை பணிசெய்ய விடாமல் தடுத்து, கை மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் கொடுத்த புகாருக்கு குற்ற எண். 202/23 U/s 294(b), 341, 323, 353, 332, 307, 506(ii), 379 IPC r/w 21(iv) MMDR Act ன் படி 28.05.2023 அன்று வழக்கு பதிவு செய்யப்ட்டு வழக்கின் எதிரிகள் 28.05.2023 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (II-ADJ) நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக திரு. பாலசுப்பிரமணியன், ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (29.01.2026) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு.கோபிநாத், (II-ADJ) அவர்கள் எதிரி-3 மணிகண்டன் 26/23, த.பெ.ராமகிருஷ்ணன், வடக்கு

செயின்ட், நரசிங்கபுரம், துறையூர், என்பவருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரூபாய். 1,000 அபராதம் வழங்கியும், மற்ற எதிரிகளை விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த துறையூர் நீதிமன்ற பெண் தலைமை காவலர் திருமதி. எழிழரசி என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments