Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 2026 ஜனவரி 1-ஆம் தேதி அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து, பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், ஏப்ரல் 6-ஆம் தேதி நிலவரப்படி திருத்தப்பட்ட புதிய வாக்காளர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, திருச்சி மாவட்டத்தின் 9 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 லட்சத்து 40 ஆயிரத்து 900 ஆண்களும், 11 லட்சத்து 5 ஆயிரத்து 841 பெண்களும், 310 பிற்பாலினரும் அடங்குகின்றனர்.தொகுதிவாரியாக பார்க்கையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். திருவெறும்பூர் தொகுதியில் குறைந்த வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 2,787 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இருந்த 2,785 வாக்குச்சாவடிகளுடன் ஒப்பிடும்போது, தற்போது 2 கூடுதல் சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன.இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *