Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி :திமுக கவுன்சிலர் கொலை வழக்கு- எதிரிகள் அதிரடி கைது!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழமாதேவி பகுதியில் வசித்து வந்த ரஞ்சித்குமார் (42), த.பெ. அந்தோணி என்பவர் திருவெறும்பூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகில் அரசு உரிமம் பெற்று பார் நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த 30.03.2026 அன்று இரவு சுமார் 09.30 மணியளவில் தனது வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சோழமாதேவி அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் மேற்படி ரஞ்சித்தை வழிமறித்து அருவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டதாகவும், அவ்வழியே இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அடையாளம் கண்டு மேற்கண்ட பாரின் மற்றொரு பார்ட்னரான மகாதேவன் என்பவருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் துறையினர் சம்பவ இடம் சென்று முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு, பிரேதத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக நவல்பட்டு காவல் நிலைய குற்ற எண்.129/26 U/S 103 BNS ன் படி 31.03.26 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி கொலை சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய திருவெறும்பூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையாக சம்பவ இடத்தின் அருகிலிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தும், பூலாங்குடி, பழங்கனாங்குடி, OFT காட்டுப்பகுதிகளில் எதிரிகளை தேடியபோது கடந்த 02.04.2026 அன்று காவேரி நகர் கரைக்கு எதிரே உள்ள காட்டுப்பகுதியிலிருந்து வந்த TN 81 AX 5170 பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை நிறுத்தியதில், வாகனத்தில் வந்த இரண்டு நபர்களும் வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோடியவர்களை காட்டுப்பகுதிக்குள் விரட்டி சென்று பிடித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதாகவும், மேற்படி வாகனத்தில் இருந்த அருவாளை கைப்பற்றி விசாரணை செய்ததில் வாகனத்தை ஓட்டிவந்தவர் பெயர் 1) மதன்(25), த.பெ.மகேந்திரன், கணேசா நகர், திருவெறும்பூர், திருச்சி, 2)கிரி (எ)புவனேஸ்வரன் (25), த.பெ.கென்னடி, மாரியம்மன்கோவில் தெரு, நவல்பட்டு,திருச்சி என்றும், திருவெறும்பூரில் டாஸ்மார்க் பார் நடத்தி வரும் ரஞ்சித்குமாரை தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டவர்களை கைது செய்து, நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை

மேற்கொள்ளப்பட்டதில், இவர்களுடன் 3) ஹரிஹரன் (19), த.பெ. ரெங்கபிரபு, செடி மலை முருகன் கோவில் தெரு, துவாக்குடி மற்றும் 03 இளஞ்சிறர்களும் சம்பவத்தில் ஈடுபட்டதை, தக்க ஆதாரங்களுடன் கண்டறிந்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டது.
மேல்விசாரணையில், மேற்படி குற்றவாளிகள் தங்களுடன் கொலை சம்பவத்தில் மேலும் பலர் இருந்ததாக தெரிவித்ததன்பேரில் குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்ததில், குற்றவாளிகள் நாகராஜ், சஞ்சய், ரெக்ஸ்லாரன்ஸ், சுரேஷ் மற்றும் சுரேன்குமார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. அதனடிப்படையில், மேற்படி குற்றவாளிகளான 1) நாகராஜ் (27), த.பெ ராஜேந்திரன், 4-வது தெரு, பாரதிதாசன் தெரு, வடக்கு காட்டூர், திருச்சி, 2) சஞ்சய் (23), த/பெ. ராஜேஷ், 6-வது தெரு, பாத்திமாபுரம், வடக்கு காட்டூர், 3) ரெக்ஸ்லாரன்ஸ் (22), த.பெ. சார்லஸ்ராஜா, இலங்கேஷ் நகர, வீதி வடங்கம், காட்டூர்,திருச்சி, 4) சுரேஷ் (19), த.பெ.ராஜேந்திரன், முருகன் கோவில் தெரு, தெற்கு காட்டூர், திருச்சி, 5) சுரேன்குமார் (32), த.பெ.பிரேம்ஆனந்த், 4/48, காந்திநகர், 5-வது தெரு, திருச்சி ஆகியோர்களை கைது செய்து தனித்தனியே விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி அனைத்து எதிரிகளிடம் நடத்திய விசாரணையில், பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி தினேஷ்குமார் (எ) பாட்டில் மணி (35), த.பெ. ஜான்கென்னடி, 164 கணபதிநகர், கைலாஷ்நகர், திருவெறும்பூர், திருச்சி என்பவருக்கும், இறந்துபோன ரஞ்சித்குமாருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்த நிலையில், ரஞ்சித்குமார் நடத்தி வரும் பாரில் அவ்வப்போது பணம் கேட்டு, கொடுக்காததால் பிரபல ரவுடியான தன்னை (பாட்டில் மணியை) ரஞ்சித்குமார் மதித்து பணம் தராமல் அலட்சியம் செய்ததால், ரஞ்சித் குமாரை கொலை செய்தால் மட்டுமே அப்பகுதியில் தன்னை ரவுடியாக காட்டமுடியும் என்ற பகை உணர்வோடு இருந்து வந்துள்ளார். தற்போது தினேஷ்குமார் (எ) பாட்டில் மணி சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், மேற்கண்ட எதிரிகள் மதன் மற்றும் கிரி ஆகியோரிடம் பாட்டில் மணி, தன்னை ரஞ்சித்குமார் மதிக்கவில்லை என்று கூறியதாகவும், அதற்கு மேற்படி எதிரிகளும் ரஞ்சித்குமார் தங்களையும் மதுபான கடைக்கு செல்லும்போது திட்டி, மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆகையால், பாட்டில் மணி தன்னை பார்க்க வந்த கூட்டாளிகளிடம், இதே நிலைமை நீடித்தால், நமக்கு அப்பகுதியில் மரியாதை இருக்காது, எனவே, அவனை சரியான நேரம் பார்த்து வெட்டி தீர்த்து கட்டிவிடுங்கள் என கூறியதாக தெரிகிறது. இதனை மனதில் வைத்துக்கொண்டு, மேற்கண்ட கொலை சம்பவத்தை இரண்டு எதிரிகளும் மற்ற எதிரிகளுடன் ஒன்று சேர்ந்து நிகழ்த்தியதாக தாங்களாகவே ஒப்புக்கொண்டு, வாக்குமூலமாக எதிரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கின் எதிரிகளான 6 நபர்கள் (3 -இளஞ்சிறார்கள்) நேற்று 03.04.2026 நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட 5 – எதிரிகளை விசாரணை செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய 4 அருவாள்கள், 1 – இருசக்கர வாகனம் மற்றும் 6 – செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

மேலும், இக்கொலை சம்பவத்திற்கு முக்கிய தூண்டுகோலாக இருந்த தினேஷ் (எ) பாட்டில் மணி என்பவரை இவ்வழக்கின் எதிரியாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி கொலையானது, இரவு நேரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நடைபெற்றதால், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என தெரியாமலும் மற்றும் எந்த கண்ணோட்டத்தில் கொலை நடைபெற்றது என்பது குறித்து துப்பு துலக்குவதில் மிகுந்த சவாலாக இருந்து வந்த நிலையில், காவல்துறை மிகுந்த சிரத்தையோடு இரவு பகல் பாராமல், பல்வேறு கோணங்களில், பல்வேறு நபர்களிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டதில் கிடைத்த சிறு துருப்பு மூலம் மேற்படி எதிரிகளை கைது செய்தும், கொலை செய்ததற்கான உள்நோக்கத்தினை கண்டுபிடித்து, கொலையாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டது. இறந்து போன ரஞ்சித்குமார் அப்பகுதியில் உள்ள அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகக் கூடியவர் என்றும், யாரிடமும் எவ்வித பகையும் இல்லை என அனைவராலும் தெரிவிக்கப்பட்டது. இறந்து போனவரின் குடும்பத்தினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் காவல்துறையின் செயல்பாடுகள் மிகுந்த ஆறுதல் அளிக்கும் வண்ணமாக இருந்ததாக சமூக ஆர்வலர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *