Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி: ரூ.1.72 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார் துரை வைகோ எம்.பி.!

எனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1கோடியே 55 லட்சத்து 55 ஆயிரம், மேலும், தலைவர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.00 இலட்சம் என, மொத்தம் ரூ.1கோடியே 72 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிகளில் கட்டப்பட்டுள்ள பணிகளை இன்று (21/02/2025) திறந்து வைத்தேன்.

திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் காலை 8 மணிக்கு
7-ஆவது வார்டு புஷ்பக் நகர் அம்மா மண்டபம் சாலை பகுதியில் ரூ.17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட
நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்தேன்.

இதனைத் தொடர்ந்து சிறுகமணி பேரூராட்சி, திருவள்ளுவர் நகரில்
பயணிகள் நிழற்குடை (மதிப்பீடு – ரூ.7 இலட்சம்.),
பெட்டவாய்த்தலை காவல் நிலையம் அருகில் பயணிகள் நிழற்குடை (மதிப்பீடு – ரூ.7 இலட்சம்).

அந்தநல்லூர் ஒன்றியம், மருதாண்டாக்குறிச்சி ஊராட்சியில் நியாய விலைக்கடை (மதிப்பீடு – ரூ.13.30 இலட்சம்)
மணிகண்டம் ஒன்றியம், அம்மாபேட்டை ஊராட்சி, பூலாங்குளத்துப்பட்டியில் பயணிகள் நிழற்குடை (மதிப்பீடு – ரூ.7 இலட்சம்),
மணிகண்டம் ஒன்றியம், அளுந்தூர் ஊராட்சி வரகுணேஸ்வரர் கோயில் அருகில்
சீரணி அரங்கம் (மதிப்பீடு – ரூ.10 இலட்சம்).

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சேதுராப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இரண்டு கழிப்பறைக் கட்டடம் (மதிப்பீடு – ரூ.2.25 இலட்சம்).
திருச்சி மாநகராட்சிப் பகுதி எடமலைப்பட்டி புதூர் குட்டக்கரை
நியாயவிலைக் கடை (வார்டு எண் – 62-மதிப்பீடு – ரூ.17 இலட்சம்),
ஆனந்த்ராஜ் நகர் நியாய விலைக் கடை ( வார்டு எண் – 64-மதிப்பீடு – ரூ.17 இலட்சம்),
காமராஜ் நகரில் தலைவர் வைகோ அவர்கள் நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடிக் (வார்டு எண் – 61-மதிப்பீடு – ரூ.17 இலட்சம்) கட்டடத்தையும் திறந்து வைத்தேன்.

இதனையடுத்து, பிற்பகல் 3:00மணி அளவில் திருவெறும்பூர் 40-ஆவது வார்டு வடக்கு இந்திரா நகரில் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுடன் இணைந்து, ரூ.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பறைக் கட்டடத்தைத் திறந்து வைத்தேன்.

மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அவர்கள் முன்னிலையில், திருவெறும்பூர் ஒன்றியம், வேங்கூர் ஊராட்சி பெரியார் நகரில் என்னுடைய தொகுதி வளர்ச்சி நிதி ரூ.48 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக் கூடத்தை திறந்து வைத்துப் பேசினேன்.

அப்போது, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திருவெறும்பூர் தொகுதி, வேங்கூர் பெரியார் நகரில்தான் சமுதாயக் கூடம் கட்டித் தந்திருக்கிறோம் என்பதையும் நினைவூட்டினேன்.

இன்றைய நிகழ்வில் திருவரங்கம் தொகுதியில் ரூ.63.55 இலட்சம்,
திருச்சி மேற்கு தொகுதியில் ரூ.17.00 இலட்சம்,
திருச்சி கிழக்கு தொகுதியில் ரூ.34.00 இலட்சம்,
திருவெறும்பூர் தொகுதியில் ரூ.58.00 இலட்சம் என மொத்தம் ரூ.1 கோடி 72 இலட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தேன்.

மேற்கண்ட கட்டடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் பொதுமக்களின் நீண்டநாள் தேவைகளை கருத்தில் கொண்டு, தரமான முறையில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன. இது, திருச்சி மாவட்டத்தின் சமூக மற்றும் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பாக அமையும் என்பதால், இதை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அங்கு திரண்டிருந்த மக்களிடம் கேட்டுக் கொண்டேன்.

மேலும், அயலகத்தில் உயிரிழந்த எனது தொகுதி திருவெறும்பூரைச் சேர்ந்த கருப்பையா பாஸ்கர் அவர்களது உடலைக் கொண்டு வருவதற்கு நான் உதவினேன். இன்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து எனது ஆறுதலைத் தெரிவித்தேன்.

திருச்சி ஏர்போர்ட் பகுதிக் கழகத்திற்கு உள்பட்ட வார்டு எண் 61-இல் உள்ள கோயிலுக்கு பகுதிக் கழக நிர்வாகிகள் தந்த ரூ.50000/-ஐ வழங்கி அம்மனை வழிபட்டேன்.

இந்த சுற்றுப் பயணத்தில் என்னுடன்திமுக திருச்சி கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், மறுமலர்ச்சி திமுக துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ்மாணிக்கம், கே.கழககுமார், சிறுகமணி பேரூராட்சித் தலைவர் சிவகாம சுந்தரி, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.ராஜலிங்கம், அந்தநல்லூர் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் எஸ்.துரைராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் ஆற்றலரசு, சதீஸ் மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், மறுமலர்ச்சி திமுக ஒன்றிய, நகரச் செயலாளர்கள், மாநகர பகுதிச் செயலாளர்கள், தோழமை இயக்கத்தினர் என திரளாகக் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *