திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் மணிவேல். இவரது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் பச்சைமலை பகுதி வண்ணாடு ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு கட்ட தேர்வான பயனாளிகளிடம் தலா ரூ.3000 வீதம் ஐந்து பயனாளிகளிடம் ரூ.15000ம் லஞ்சம் பெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் பயனாளியிடம் நான் இடத்தை பார்வையிட வரும்பொழுது மீதி பணத்தை தர வேண்டும் என்று கறாராக கூறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதுக்குறித்து துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே திருச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன் அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ள நிலையில் அடுத்ததாக துறையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO







Comments