திருச்சி பிரஸ் கிளப் சார்பில் ஊடகத் துறையினர் மற்றும் பத்திரிக்கைத் துறையினர்ககு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்று வருகின்றனர். இன்று துவங்கி நடைபெறும் போட்டிகள் வரும் 30ம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

இதில் கிரிக்கெட், கால்பந்து, கேரம் செஸ், ஓட்டப் பந்தயம், கயிறு இழுத்தல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக இன்று கேரம் போட்டி நடைபெற்றது. அதில் ஆண்கள் பிரிவில் ரோவிந்த் மற்றும் வேலுச்சாமி முதலிடத்தை தட்டிச் சென்றனர். இரண்டாமிடத்தை குமரவேல் மற்றும் ராஜ்குமார் அணி பிடித்துக்கொண்டனர்.
அதேபோல மகளிர் சுற்றில் புதியதலைமுறை செய்தியாளர் பிருந்தா முதலிடமும் தி ஹிந்து ஆங்கில பத்திரிக்கை செய்தியாளர் cathelin இரண்டாம் இடம் பிடித்து நேர் போட்டியில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் பிரஸ் கிளப்பில் வழங்கப்பட உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments