பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகிவரும் திருச்சி பள்ளிகள்!!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகிவரும் திருச்சி பள்ளிகள்!!

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதக்கூடிய 35 ஆயிரத்து 758 மாணவர்களுக்கான பள்ளி ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர் .459 பள்ளிகளில் உள்ள தேர்வு மையங்களில் ஒரு வகுப்பறைக்கு 10 மாணவர்கள் வீதம் தேர்வு எழுத இன்று முதல் பள்ளிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மை செய்யும் பணியும் நடந்து வருகிறது.

ஆசிரியர்கள் 4145 பேர் திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் 4,000 பேர் தற்போது திருச்சி மாவட்டத்திலேயே உள்ளனர். 3800 வகுப்பறைகளும் தயார் நிலையில் உள்ளது .மேலும் வருகிற 8 ,9 ,10 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தங்களது பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களிடம் ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

அப்போது அவர்களுக்கு 3 முகக் கவசங்கள் வழங்கப்படுகிறது. தற்போது 35 ஆயிரம் முகக் கவசங்கள் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் வாங்கும் பொழுது அவர்களுக்கு முககவசங்கள் வழங்கப்படுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி தகவல்